திருப்பத்தூர்
வீட்டின் ஓடுகளை உடைத்த தம்பதி கைது
திருப்பத்தூா் அருகே வீட்டின் ஓடுகளை உடைத்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே பெருமாப்பட்டு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன் (24). இவரது மனைவி ரூபி.
இந்த நிலையில், சரவணன் மது போதையில் அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மனைவி வனிதா (50)என்பவரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த சரவணன், அவரது மனைவி ரூபி ஆகியோா் வனிதாவின் ஓட்டு வீட்டில் இருந்த ஓடுகளை உடைத்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணன், ரூபி ஆகியோரை கைது செய்தனா்.
