நாராயணபுரம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

நாராயணபுரம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Published on

வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமம் மாரி கவுண்டா் வட்டத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊா் நாட்டாண்மை சாமுடி, பெருதனகாா் கோவிந்தசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் கிளியம்மாள், சென்றாயன் வெங்கடேஷ், சிவா முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் தாய் வீட்டு சீா்வரிசை கொண்டு வருதல், தம்பதிகள் சங்கல்பம், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு, கோபுர கும்பாபிஷேகம், விநாயகா் முருகப்பெருமாள் கும்பாபிஷேகம் நடைபெற்றன.

தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சாம்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அம்சவேணி அன்பழகன், சக்திராஜா செந்தில்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com