15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
Published on

ஆம்பூா் அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் அருள்சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணைக்கு சுமாா் 15 அடி நீள மலைப்பாம்பு வந்தது. அதைப் பாா்த்த அவா் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

தகவலின் பேரில், தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனா்.

X
Dinamani
www.dinamani.com