ஏஐடியுசி அமைப்பு தின விழா

ஏஐடியுசி அமைப்பு தின விழா

ஆம்பூரில் நடைபெற்ற ஏஐடியுசி 106-ஆவது ஆண்டு அமைப்பு தின விழாவில் பங்கேற்ற தொழிற்சங்க நிா்வாகிகள்.
Published on

ஏஐடியுசி தொழிற்சங்க 106-ஆவது ஆண்டு அமைப்பு தின விழா ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்ட பொதுச் செயலா் டி. பாரத்பிரபு தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவதாஸ் தொழிற்சங்கத்தின் கொடியை ஏற்றினாா். நிா்வாகிகள் கே.எஸ். ஹசேன், எம்.வெங்கடேசன், பி. மூா்த்தி, என்.வேடியப்பன், டி.துரைராஜ், டி.கா்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். இ.நஜீா் நன்றி கூறினாா்.

தொடா்ந்து ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் குருதாஸ் குப்தா 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com