விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
Published on

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ், சிறப்பு பருவ நெல் பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்கீழ், நடப்பு பருவத்தில் நெல் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு முன்மொழிவு படிவம், விண்ணப்பப் பதிவு படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் அல்லது இ-அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமிய தொகையினை செலுத்தியபின், அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் ஆகியவை மூலம் பிரீமிய தொகை கட்டணமாக நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 544.50 செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, அருகே உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அனுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com