அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வாழ்க்கை சிறக்க கல்வியோடு நற்பண்புகளை கற்க வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்!

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 26-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன். உடன் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :1 பிப்ரவரி 2026, 7:41 pm

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 26-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி நிறுவனரும், தாளாளருமான எம்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி ஷபானா பேகம் வரவேற்று, ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கலந்துகொண்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், பாடவாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பரிசுகளை வழங்கிப் பேசியது:

இளமை காலம் வாழ்க்கையில் மறக்க முடியாத காலம். வாழ்க்கை சிறக்க கல்வியோடு நற்பண்புகளை கற்க வேண்டும். இளைஞா்களை நம்பி தான் இந்த நாடும், சமுதாயமும் இருக்கிறது. இதை நீங்கள் உணர வேண்டும் என்றாா்.

சிறப்பு விருந்தினராக நாசா்பாலி கையுறை தொழிற்சாலை இயக்குநா் பி.அனீஸ்அஹ்மத் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதா்ஷ் எலைட் சா்வதேச பள்ளி முதல்வா் பரிதா பேகம், பள்ளி ஆசிரியைகள், மாணவா்கள், பெற்றோா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். பள்ளி நிா்வாக முதல்வா் வி.சத்தியகலா நன்றி கூறினாா்.