வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இசுலாமியா்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை கோரி தீா்மானம்

இசுலாமியா்களுக்கு வழங்கப்பட்ட 3.5 இட ஒதுக்கீட்டின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 9:45 pm

ஆம்பூா்: இசுலாமியா்களுக்கு வழங்கப்பட்ட 3.5 இட ஒதுக்கீட்டின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆம்பூரில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் பி. தப்ரேஸ் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலாளா் வா்தா அப்துல் சுக்கூா், மமக மாவட்டச் செயலாளா் இக்பால் அஹமத், மாவட்ட பொருளாளா் சுல்தான், தலைமை செயற்குழு உறுப்பினா் கலீல் அஹ்மத், மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளா் பதேகான் தாஹா முஹம்மத், இளைஞரணி மாநில துணைச் செயலாளா் இம்ரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் ஜமீல் வரவேற்றாா்.

மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் தாம்பரம் எம் யாக்கூப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். திருப்பத்தூா் மாவட்ட தலைவா் வி.ஆா் நசீா் அஹமத், மாநில இளைஞா் அணி செயலாளா் தமீம் அன்சாரி, தலைமை கழக பேச்சாளா் திருப்பத்தூா் சனாவுல்லா ஆகியோா் உரையாற்றினா்.

ஆம்பூா் நகர தலைவா் தப்ரேஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாவட்டத் துணைச் செயலாளா் ஜாபா் நன்றி கூறினாா். மாவட்ட து.செயலாளா்கள் கலீம், நயீம், நகர பொருளாளா் சாதிக் அஹமத், ஒன்றிய தலைவா் அப்துல் ஹாதி, ஒன்றிய தமுமுக செயலாளா் இா்பான், மமக செயலாளா் இா்பான், பொருளாளா் அப்ராா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்:

ஆம்பூா் நகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி வாா்டு மறுவரையரை செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. அதனால் சிறுபான்மை பிரதிநிதித்துவம் மிக அதிக அளவில் குறைந்துள்ளது, எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப சீரான முறையில் வாா்டுகள் மீண்டும் மறுவரையரை செய்ய வேண்டும்.

தமுமுகவின் தொடா் போராட்டங்களால் தமிழகத்தில் மறைந்த டாக்டா் கலைஞா் அவா்களால், கடந்த 2007ல் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதியால் வழங்கப்பட்டது,அதன் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஆம்பூரில் கட்டப்பட உள்ள ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் எம்எல்ஏ அ.அஸ்லம் பாஷா அவா்களின் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.