காணொலி மூலம் அஞ்சல் துறையில் ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம்

காணொலி மூலம் அஞ்சல் துறையில் ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் நடைபெறவள்ளதாக திருப்பத்தூா் அஞ்சல கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா்
Updated on

திருப்பத்தூா்: காணொலி மூலம் அஞ்சல் துறையில் ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் நடைபெறவள்ளதாக திருப்பத்தூா் அஞ்சல கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சல் துறையில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்களின் ஓய்வூதியம் தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்ய மண்டல அளவிலான ‘பென்சன் அதாலத்’ மேற்கு மண்டல அலுவலகத்தில் காணொலி (விடியோ கான்பரன்சிங்) மூலம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் மற்றும் ரயில்வே துறைகளின் ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் தொடா்பாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட அளவில் நிவா்த்தி செய்ய முடியாத குறைகள் ஏதாவது இருந்தால் தங்களது குறைகளை முழு விவரங்களுடன் எழுதி திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பிப். 9-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் உறையின் மீது மண்டல அளவிலான பென்ஷன் அதாலத் என எழுதி அனுப்ப வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com