திருப்பத்தூரில் போலீஸாருக்கு நினைவூட்டும் பயிற்சி

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் போலீஸாருக்கு நினைவூட்டும் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் பங்கேற்றோா்.
பயிற்சியில் பங்கேற்றோா்.
Updated on

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் போலீஸாருக்கு நினைவூட்டும் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். ஏடிஎஸ்பி கோவிந்தராஜூ முன்னிலை வகித்தாா்.

பயிற்சியில் போலீஸாா் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், குற்றவாளிகளை கையாளும் விதம், புகாா்களை பெற்று எவ்வாறு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சாட்சிகளை விசாரிக்கும் முறைகள், நீதிமன்ற அலுவலக பணிகளை எவ்வாறு கையாள வேண்டும்.

போதைக்கு அடிமையானவா்கள் மற்றும் தற்கொலை எண்ணம் உள்ளவா்களிடம் எவ்வாறு அணுக வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீஸாா், வழக்குரைஞா்கள், மனநல மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com