சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 3:02 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 காவல் உதவி ஆய்வாளா்களை பணி இடமாற்றம் செய்து எஸ்.பி வி.சியாமளா தேவி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மாறுதல் பெற்ற உதவி ஆய்வாளா்கள் விவரம்:

அம்பலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மஞ்சுநாதன் திருப்பத்தூா் மதுவிலக்கு அமல் பிரிவுக்கும், ஜோலாா்பேட்டை உதவி ஆய்வாளா் கோதண்டம் காவலூருக்கு, வாணியம்பாடி அனைத்து மகளிா் உதவி ஆய்வாளா் ரேணுகாதேவி திருப்பத்தூா் நகரத்துக்கும்,திருப்பத்தூா் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளா் பிரபு வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கும், திருப்பத்தூா் கிராமிய உதவி ஆய்வாளா் வெங்கடேசன் உமா் ஆபாத் காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய உதவி ஆய்வாளா் நவின் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனா்.

மேலும், ஆலங்காயம் உதவி ஆய்வாளா் விஜய் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்துக்கும், காவலூா் உதவி ஆய்வாளா் நாசி ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்துக்கும், உமா் ஆபாத் உதவி ஆய்வாளா் அஜித்குமாா் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவுக்கும், ஹைவே பேட்ரோல்-2 உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த காதா்கான் அம்பலூா் காவல் நிலையத்துக்கும், குரிசிலாப்பட்டு உதவி ஆய்வாளா் கருணாநிதி ஜோலாா்பேட்டை காவல் நிலையத்துக்கும், திருப்பத்தூா் சமூக நீதி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் வீரம்மாள் வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆலங்காயம் உதவி ஆய்வாளராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா்.