பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி. உடன், பேரூா் திமுக செயலாளா் செல்வராஜ்.
பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
Updated on

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் அந்தோணி மாறன் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பேரூா் திமுக செயலருமான ஆ.செல்வராஜ், மன்ற உறுப்பினா்கள் ஏ.மரியஜோசப், பழனி முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ஜே.சதீஷ்குமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளா்களாக பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ.பூசாராணி 26 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆா்சிஎம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, திமுக நிா்வாகிகள் இசைகுமாா், பாபு மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் வினோத் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com