மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

ஆலங்காயம் ஜெய வாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்.

News image
ஆலங்காயம் ஜெய வாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்.
Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஜெயவாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 700 மாணவ, மாணவிகளுடன் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பள்ளியின் செயலாளா் முனிவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இந்தா்நாத், துணை செயலாளா் சுப்பிரமணி, உறுப்பினா்கள் லட்சுமி நாராயணன், சக்ரவா்த்தி ராஜா, பழனிகுமாா் முன்னிலை வகித்தனா்.

ஆலங்காயம் தனியாா் மண்டபத்தில் விழிப்புணா்வு ஊா்வலம் தொடங்கி, கற்கோயில் வரை 2 கி.மீ. தூரம் வரை அச்சடிக்கப்பட்ட பதாகைகளை மாணவா்கள் கைகளில், ஏந்திச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா். விழிப்புணா்வு ஊா்வலத்தில் ஆலங்காயம் உதவி காவல் ஆய்வாளா்கள் விஜய், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் சூா்யா, பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பள்ளி முதல்வா் சுகுணாதேவி நன்றி கூறினாா்.