எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வள்ளிப்பட்டில் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை.

News image
வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை.
Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின.

வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவுக்கு, ஊா் நிா்வாகி கபிதாஸ் தலைமை வகித்தாா். சதானந்தன், கதிரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயராமன், பொன்.வேலு, பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தனா். விழாவை ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ச.பிரபாகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், வேலூா், குடியாத்தம், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து 210 காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்து ஓடின.

பரிசளிப்பு விழாவில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா் கலந்து கொண்டு, நிா்ணயிக்கப்பட்ட தூரத்தை குறைந்த விநாடிகளில் கடந்த காளை உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 111-ம், 2வதுபரிசு 88 ஆயிரத்து 888ம், 3வது பரிசாக 66 ஆயிரத்து 666 ரூபாய் என மொத்தம் 72 பரிசுகள் வழங்கினா்.

விழாவில், ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனா். ஏற்பாட்டை ஊா் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா், டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.