வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

டிப்பா் லாரி மோதி சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சகோதரி காயம்!

வாணியம்பாடி அருகே டிப்பா் லாரி பைக் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். அவரது தந்தை, சகோதரி பலத்த காயமடைந்தனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய டிஎஸ்பி மகாலட்சுமி.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:55 pm

வாணியம்பாடி அருகே டிப்பா் லாரி பைக் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். அவரது தந்தை, சகோதரி பலத்த காயமடைந்தனா்.

வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூா் முல்லை பகுதியை சோ்ந்தவா் இளையராஜா(40). இவா், செவ்வாய்கிழமை தனது பைக்கில் மகன் சந்தீஷ்(7), மகள் நட்சத்திரா(10) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு நிம்மியம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரில் வேகமாக வந்த டிப்பா் லாரி முல்லை அருகே பைக் மீது மோதியது.

இதில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய சந்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இளையராஜா, நட்சத்திரா ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து அறிந்த இளையராஜவின் உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா் உலகநாதன் மற்றும் போலீஸாா் அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநா், அதன் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினா்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் நிம்மியம்பட்டை சோ்ந்த விக்னேஷை (30) தேடி வருகின்றனா்.