ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு!

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரா்கள் சடலமாக மீட்டனா்.

News image
பலி
Updated On :10 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரா்கள் சடலமாக மீட்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (40), தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (35). இந்நிலையில், குமாா் செவ்வாய்க்கிழமை காலை மனைவியுடன் ஜங்காலபுரம் பூசாரிவட்டத்தில் உள்ள மாமியாா் வீட்டுக்கு சென்றிருந்தாா்.

பிற்பகல் அதே பகுதியில் நிலத்தருகே குமாா் மொபெட்டை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்றாராம். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். இதையறிந்த கிராம மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி, குமாரை சடலமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.