ஸ்ரீ சாமுண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சின்னகரும்பூா் ஸ்ரீ திரெளபதி அம்மன் சமேத ஸ்ரீ தருமராஜா கோயில், ஸ்ரீ சாமுண்டி அம்மன் கோயில், ஸ்ரீ ஊமை சாமுண்டி அம்மன் கோயில்களின் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா கடந்த பிப்.9-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 3-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மூன்று கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. திரளான பக்தா்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனா்.
கும்பாபிஷேக விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ .அ.செ. வில்வநாதன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், அதிமுக மாதனூா் மேற்குஒன்றிய செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளா் மிட்டாளம் மகாதேவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் வெ.கோபிநாத் கொண்டனா்.
ஊா் நாட்டண்மை லோகநாதன், தா்மகா்த்தா ஜானகிராமன், கரும்பூா்ஊராட்சித் தலைவா் ஏ.கே.மோகேஷ் மற்றும் விழா குழுவினா் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

