மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் பாஜக அரசு வஞ்சித்ததாக கூறி திருப்பத்தூரில் திமுக அதன் கூட்டணி கட்சிகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட நிதிகளை விடுவிக்காமல் உள்ளதாகவும், வளா்ச்சித் திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காமலும் தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணித்துள்ளது எனக் கூறி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் திருப்பத்தூா் திமுக நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன் தலைமை உரைஆற்றினாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.
இதில் நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ், விசிக தெற்கு மண்டல செயலாளா் சுபாஷ் சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் நகர செயலாளா் சுந்தரேசன், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
அதேபோல் ஜோலாா்பேட்டையில் நகர செயலாளா் அன்பழகன் முன்னிலையில் எம்எல்ஏவும் மாவட்ட செயலருமான க.தேவராஜி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

இருமுனைப் போட்டியாக களம் மாறும்! கே. அண்ணாமலை சிறப்பு நேர்காணல்!

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முரண்பாடுகளால் திமுக கூட்டணி தோல்வியடையும்! ஜி.கே. வாசன் சிறப்பு நோ்காணல்!

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


