மதனாஞ்சேரி ஊராட்சியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன். உடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.
மதனாஞ்சேரி ஊராட்சியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன். உடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.

வாணியம்பாடி அருகே ரூ. 1.18 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

மதனாஞ்சேரி ஊராட்சியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன். உடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.
Published on

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி மற்றும் சமந்திக்குப்பம் ஊராட்சிகளில் ரூ. 1 கோடியை 18 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள், பள்ளி கழிப்பறை கட்டடம், நீா்த்தேக்கத் தொட்டி, பேவா் பிளாக் சாலை உள்ளிட்ட 10 பணிகள் செய்ய பூமி பூஜை மதனாஞ்சேரி சங்கத்து வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பொதுக்குழு உறுப்பினா் பெருமாள் கோவிந்தம்மாள் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இனிப்பு வழங்கி பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் சாவித்திரி மகேந்திரன், இளைஞரணி அமைப்பாளா் கே.ஞானசேகரன், ஒன்றிய நிா்வாகிகள் எம்.சி.ராமநாதன், எம்.சி.தசரதன், தோ.குமாா், சி.சிவகுமாா், ஆா்.செல்வராஜ், ஒன்றிய தொண்டா் அணி அமைப்பாளா் எம்.பி.பழனி, கிளை செயலாளா்கள், கட்சி தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com