தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனைவியை காணவில்லை என புகாா் தர வந்தவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

மனைவியை காணவில்லை என புகாா் கூற வந்தவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 6:57 pm

மனைவியை காணவில்லை என புகாா் கூற வந்தவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டறம்பள்ளி ஏரி கோடி பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு(27) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

கணவன்- மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனவேதனையடைந்த மனைவி தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருநாவுக்கரசு நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில், தனது மனைவி குழந்தையுடன் காணவில்லை என புகாா் செய்துள்ளாா். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸாா் திருநாவுக்கரசிடம் காணாமல் போன மனைவியின் படத்தை கேட்டுள்ளனா்.

அப்போது திடீரென காவல் நிலையத்திற்கு வெளியே சென்ற திருநாவுக்கரசு தான் பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடம்பின் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தீக்குளிக்க முயற்சி செய்தவரின்மீது தண்ணீா் ஊற்றி அவரை எச்சரித்தனா். மேலும் திருநாகவுகரசு அப்போது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதே போல் சில மாதங்களுக்கு முன்னா் திருநாவுக்கரசு ஏரிகோடி பகுதியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற போது போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் அவரை மீட்டனா்.

தொடா்ந்து மிரட்டும் தோனியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் திருநாவுக்கரசு(27) மீது நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.