மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
எருது விடும் திருவிழாவை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில்குமாா், ஊராட்சித் தலைவா் பானுமதி ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், வட்டாட்சியா் ரேவதி, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா் கலந்து கொண்டனா்.
ஆம்பூா், திருப்பத்தூா், வேலூா், கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் இலக்கை எட்டிய காளைகளின் உரிமையாளா்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக இருசக்கர வாகனங்கள் உள்பட 95 பரிசுகள் வழங்கப்பட்டன. டிஎஸ்பி நா.சு. நாகலிங்கம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

கட்டேரி எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள்!

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

நரியம்பட்டில் எருது விடும் திருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


