வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே சாலை வசதி கோரி பெண்கள் உள்பட பொதுமக்கள் அரசுப் பேருந்தினை சிறைப்பிடித்தனா்.
நாட்டறம்பள்ளி ஒன்றியம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி குழிக்கொல்லி பகுதியில் 100-க்கும்மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் சென்று வரும் மண் சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் அவ்வழியாக சென்று வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தாா் சாலை கோரி ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகளிடமும் பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சொரக்காயல்நத்தம் ஏரி அருகே பச்சூா் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த பேருந்தினையும் சிறைப் பிடித்தனா். தகவலறிந்து அம்பலூா் காவல் ஆய்வாளா் விஸ்வநாதன், பொறியாளா் காா்த்தி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணி தாா் சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாக கூறினா்.
இதையேற்று மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனா். அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

சாலை விபத்தில் தவில் இசைக் கலைஞா் உயிரிழப்பு

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


