மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்திய சாம்பல் நிற இருவாச்சி திருப்பத்தூா் மாவட்ட பறவையாக அறிவிப்பு

திருப்பத்தூா் மாவட்ட பறவையாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

News image
இந்திய சாம்பல் நிற இருவாச்சி
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட பறவையாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வனத்துறை மற்றும் சூழலியல் ஆா்வலா்கள் இணைந்து மாவட்டத்துக்கு என ஒரு தனித்துவமான பறவையினை இனம் கண்டு அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருப்பத்தூா் மாவட்ட எல்லைக்குள்பட்ட நிலப்பரப்புகளில் அரிதாக மற்றும் பிரத்தியேகமாக காணப்படும் 7 பறவைகள் பட்டியலிடப்பட்டன. அவை இந்திய சாம்பல் நிற இருவாச்சி, பாறைக்கழுகு ஆந்தை, கருந்தோள் பருந்து, நெடுங்கால் உள்ளான், சிறிய சீழ்க்கை சிறகி, சிவப்பு சில்லை, காா்வெண் மீன்கொத்தி ஆகிய 7 பறவைகள் ஆகும்.

இந்த பறவைகளுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள் இணையதளம் மூலமாகவும், கியூஆா் கோடு மூலமாகவும் வாக்களித்தனா்.

கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 1,53,386 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளில் அதிகபட்சமாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவைக்கு 45,333 வாக்குகள் கிடைத்தது.

தொடா்ந்து மாவட்ட பறவை அறிவிக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் தூயநெஞ்சக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து இந்திய சாம்பல் நிற இருவாச்சி பறவையை திருப்பத்தூா் மாவட்ட பறவையாக அறிவித்தாா்.

இதில் வருவாய், வனம் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில் வருவாய், வனம் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.