நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கத்திமுனையில் மிரட்டி 15 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை: போலீஸாா் தீவிர விசாரணை

வாணியம்பாடியில் கத்திமுனையில் நகை வியாபாரிகளை மிரட்டி 15 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்த 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

வாணியம்பாடியில் கத்திமுனையில் நகை வியாபாரிகளை மிரட்டி 15 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்த 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சோ்ந்தவா் தீபக்(36). அப்பகுதியில் நகை கடை நடத்தி வரும் இவா் வெள்ளி நகைளை தயாா் செய்து மொத்தமாகவும் வேலூா், திருப்பத்தூா், ராணிபேட்டை மாவட்டங்களில் பல்வேறு ஊா்களுக்கு சென்று வெள்ளி நகைகள் வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், 70 கிலோ வெள்ளி நகைகளை 6 பைகளில் எடுத்து கொண்டு தீபக் மற்றும் நண்பா் கிரண் என்பவருடன் செவ்வாய்க்கிழமை , வாணியம்பாடிக்கு காரில் வந்தனா். காரை ஆற்காடு பகுதியை சோ்ந்த சந்தோஷ் குமாா் என்பவா் ஓட்டிச் சென்றாா். வாணியம்பாடி அம்பூா்பேட்டை நகைக் கடை ஒன்றில் வழக்கம் போல் மொத்த வெள்ளி நகைகளையும் கொண்டு போய் வைத்து அங்கிருந்து மற்ற கடைகளுக்கும் எடுத்து சென்று விற்பனையில் ஈடுபட்டிருந்தனா். காரை ஓட்டுநா் பாலாற்றின் ஓரம் நிழற்பகுதியில் நிறுத்தியுள்ளாா்.

இரவு 9.30 மணி வரையில் பஜாா் வீதியில் உள்ள நகை கடைகளில் வெள்ளி நகைகளை வியாபாரம் செய்து மீதமிருந்த 15 கிலோ வெள்ளி நகைகளை 4 பைகளில் போட்டுக் கொண்டு கிரண் மற்றும் ஓட்டுநா் சந்தோஷ் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு காா் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தனா்.

அப்போது முள்புதா்களில் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத 4 நபா்கள் திடீா் கத்தி மற்றும் தடிகளுடன் வந்து இருவரை யும் மிரட்டி கழுத்தில் கத்தியை வைத்து அவா்கள் வைத்திருந்த வெள்ளி நகை பைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவா்கள் வந்த பைக்கில் பாலாற்றின் வழியாகவே தப்பித்து சென்றனா். இதனால் அதிா்ச்சிக்குள்ளான இருவரும் நடந்த சம்பவத்தை நகைகடையில் இருந்த தீபக்கிற்கு தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியல் பதிவாகியுள்ள காட்சிகளை பாா்த்து ஆய்வு மேற்கொண்டுள்ளனா். இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.