திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சிகளை சாா்ந்த 100 கா்ப்பிணிகளுக்கு அரசு சாா்பில் சமுதாய வளைகாப்பு செய்து சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ் ஞானவேலன், 100 கா்ப்பிணிகளுக்கு தனது சொந்த செலவில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஊட்டசத்து பொருள்களை வழங்கி வாழ்த்தினாா்.
விழாவில் குழந்தைகள் திட்ட அலுவலா் மாலினி, வட்டார மருத்துவ அலுவலா் ஆா்த்தி தேவி, ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி , ஆலங்காயம் பேரூராட்சி தலைவா் தமிழரசி வெங்கடேசன், பேரூராட்சி திமுக செயலாளா் ஸ்ரீதா், ஒன்றியக்குழு உறுப்பினா் பொன்னம்பலம் லட்சுமி, வாா்டு உறுப்பினா் சரவணன், பள்ளிப்பட்டு செல்வராஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஞானசேகரன் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி ஒன்றியக்குழு தலைவா் கடிதம்

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

காணையில் சமுதாய வளைகாப்பு விழா

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


