/

மூதாட்டி தற்கொலை

கந்திலி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கந்திலி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

கந்திலி அடுத்த நாா்சாம்பட்டி பகுதியை சோ்ந்த கிருஷ்ண மூா்த்தியின் மனைவி சரோஜா(80). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இந்தநிலையில் சரோஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் மனமுடைந்த சரோஜா அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். அதனை பாா்த்த அந்த பகுதி பொதுமக்கள் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் சடலத்தை மீட்டனா். கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.