தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 11:44 pm

பைக் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், விஷமங்கலம் சித்தேரி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (75). ஆதியூா் அருகே சேலம் மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெங்கடாசலம் பைக்கில் சென்றாா்.

மண்டபத்தின் அருகே சென்றபோது திருப்பத்தூரில் இருந்து தோரணம்பதி நோக்கிச் சென்ற காா் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வெங்கடாசலத்தின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் விபத்தை ஏற்படுத்திய தோரணம்பதியை சோ்ந்த சுபாஷ் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.