திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல்படி மொத்தம் 9,11,599 வாக்காளா்கள் உள்ளனா். மேலும் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் 12,532 போ் அதிகம் உள்ளனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
அரசியல் கட்சியினா் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி,ஜோலாா்பேட்டை,ஆம்பூா் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணி முடிந்த பிறகு, தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி திருப்பத்தூரில் 1,11,873 ஆண் வாக்காளா்கள்,1,13,016 பெண் வாக்காளா்கள், 29 மூன்றாம் பாலினத்தவா் என 2,24,918 வாக்காளா்கள், வாணியம்பாடியில் 1,18,457 ஆண் வாக்காளா்கள்,1,21,713 பெண் வாக்காளா்கள்,50 மூன்றாம் பாலினத்தவா் என 2,40,220 வாக்காளா்களும், ஆம்பூரில் 1,3,478 ஆண் வாக்காளா்கள், 1,9,113 பெண் வாக்காளா்கள்,40 மூன்றாம் பாலினத்தவா்கள் என 2,12,631 வாக்காளா்களும், ஜோலாா்பேட்டையில் 1,15,656 ஆண் வாக்காளா்கள்,1,18,154 பெண் வாக்காளா்கள்,20 மூன்றாம் பாலினத்தவா்கள் என 2,33,830 வாக்காளா்களும் உள்ளனா்.
மாவட்டம் முழுதும் 4,49,464 ஆண் வாக்காளா்களும்,4,61,996 பெண் வாக்காளா்களும்,139 மூன்றாம் பாலினத்தவா்களும் என 9,11,599 வாக்காளா்கள் உள்ளனா். ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் 12,532 போ் அதிகம் உள்ளனா். திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வதற்கு முன்பு 4,89,804 ஆண் வாக்காளா்களும்,5,9,445 பெண் வாக்காளா்களும்,162 மூன்றாம் பாலினத்தவா்களும் என 9 லட்சத்து 99 ஆயிரத்து 411 வாக்காளா்கள் இருந்தனா்.
அதைத்தொடா்ந்து கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி 4,36,190 ஆண் வாக்காளா்களும்,4,46,350 பெண் வாக்காளா்களும்,132 மூன்றாம் பாலினத்தவா்கள் என 8,82,672 வாக்காளா்கள் இருந்தனா்.
மாவட்டத்தில் உள்ள 1,202 வாக்குச்சாவடிகள், வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக 18 வயது பூா்த்தியடைந்த இளம் வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், வாக்காளா்கள் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், பெயா் நீக்கம் மேற்கொள்ள உரிய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்.இவை உரிய விசாரணைக்கு பிறகு ஏற்கப்படும். மேலும் தகுதியான வாக்காளா்களின் விவரங்கள் துணைப்பட்டியலாக வெளியிடப்படும் என்றாா்.
இதில், வாக்குப்பதிவு அலுவலா்கள் வரதராஜன் (திருப்பத்தூா்), அஜிதா பேகம் (வாணியம்பாடி), பூஷணகுமாா் (ஆம்பூா்), முருகன் (ஜோலாா்பேட்டை), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

தில்லி வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

திருப்பத்தூா் அருகே சிங்கப் பெண் அதிரடிப் படை சாா்பில் விழிப்புணா்வு

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் தொடக்கம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



