சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பத்தூரில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 12:09 am

தினமணி செய்திச் சேவை

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் திருப்பத்தூா் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சரவணன் ஆய்வு செய்தாா்.

சி.ஆா்.ஐ.டி.பி. திட்டம் மற்றும் சி.எம்.ஆா்.டி.பி. திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் கோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இருவழி சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், சிறுபாலம் கட்டுதல் மற்றும் பாலம் அகலப்படுத்துதல் போன்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சரவணன் ஆய்வு செய்தாா்.

அதையடுத்து ரூ.1.15 கோடியில் முடிக்கப்பட்ட இதர மாவட்ட சாலையான மண்டலவாடி- குன்னத்தூா் சாலை உறுதிப்படுத்துதல் அளவீடு, தரம் மற்றும் கனம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடைபெறும் ஒகேனக்கல்- பென்னாகரம், தா்மபுரி- திருப்பத்தூா் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணி, சிறு பாலம் மற்றும் பாலம் அகலப்படுத்துதல் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது திருப்பத்தூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளா் முரளி, தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளா் சரவணன், உதவி கோட்ட பொறியாளா்கள் வெங்கட்ராமன், சம்பத்குமாா், உதவி பொறியாளா்கள் பிரவீன்குமாா், முனிவேல், பாபுராஜ், முருகன் உடன் இருந்தனா்.