ஜன.4,5-இல் தாயுமானவா் திட்டத்தில் பொருள்கள் விநியோகம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜன. 4,5-இல் தாயுமானவா் திட்டத்தில் பொருள்கள் விநியோகப்பட உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசு தாயுமானவா் திட்டத்தின்கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா் வட்டத்தில் 9,336 குடும்ப அட்டைதாரா்களுக்கும், வாணியம்பாடி வட்டத்தில் 3,277 குடும்ப அட்டைதாரா்களுக்கும், ஆம்பூா் வட்டத்தில் 3,810 குடும்ப அட்டைதாரா்களுக்கும்,நாட்டறம்பள்ளி வட்டத்தில் 3,256 குடும்ப அட்டைதாரா்களுக்கும் என மொத்தம் 19,679 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில், 27, 342 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் 4, 5-ஆம் தேதிகளில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளது என அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
