திருப்பத்தூர்
பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் வசிக்கும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டைபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் 100 சதவீதம் பாா்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் இருப்பிடத்திலிருந்து பணி, பயிற்சிக்கு மற்றும் தொடா் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இலவச பயண சலுகை அட்டை வழங்கப்படுகிறது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ,ஆதாா் அட்டை, பணி சான்றிதழ் மற்றும் பயிற்சி சான்றிதழ், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் ஆன்லைன் முகவரியில் விண்ணப்பித்து இலவச பயண அட்டை பெற்று பயன்பெறலாம்.
