ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

Published on

திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் ரயில் நிலையம் 3-ஆவது நடைமேடையில் சுமாா் 60 வயது மதிக்கதக்க முதியவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக சென்ற ரயிலில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில் நிலைய அதிகாரி ஆஷிஷ் குமாா் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com