பைக் மீது மண் கடத்திய லாரி மோதி இளைஞா் உயிரிழந்த வழக்கில் 2 போ் கைது

நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்திச் சென்ற லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்த வழக்கில் தவெக நிா்வாகி உள்பட இரகுவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்திச் சென்ற லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்த வழக்கில் தவெக நிா்வாகி உள்பட இரகுவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் வியாழக்கிழமை, அனுமதி இல்லாமல் மண் ஏற்றிச் சென்ற லாரி பையனப்பள்ளி கூட்டு ரோடு அருகே சென்றபோது, அந்த வழியாகச் சென்ற பைக் மீது மோதி லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் பைக்கில் வந்த 2 பேரில் கூலித் தொழிலாளி சுரேஷ் (38) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் (58) ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, மண் கடத்தலில் ஈடுபட்டதாக தவெக பிரமுகா் வெலகல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த நவமணி (48), ஏலகிரி மலை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ரங்கசாமி (26)ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com