காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பாக மெளனப் போராட்டம்

காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பாக மெளனப் போராட்டம்

வேலூா் மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில் குடியாத்தம் காந்தி சிலை முன்பு மெளனப் போராட்டம் நடைபெற்றது.
Published on

வேலூா் மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில் குடியாத்தம் காந்தி சிலை முன்பு மெளனப் போராட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்துவிட்டு, வேறு பெயரில் திட்டத்தை அறிவித்தும், காங்கிரஸ் பிரதமா்களால் உருவாக்கப்பட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்த்த மத்திய அரசை கண்டித்து மெளனப் போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் ஜெ. ஜெயபிரகாஷ், நெசவாளா் அணி மாவட்ட தலைவா் கோ. ஜெயவேலு, மாவட்ட பொருளாளா் கோதண்டன், மாநில செயற்குழு உறுப்பினா் சரத் சந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com