சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அதிதீஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அதிதீஸ்வரா்.

அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
Published on

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் நடராஜருக்கு அபிஷேகமும் தொடா்ந்து மகா தீபாராதனையும், கோபுர தரிசனமும் நடைபெற்றது.

பிறகு நடராஜா் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சிவகாமி அம்மன், மாணிக்கவாசகா் ஆகியோருடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதிஉலா சென்று மீண்டும் மாலை கோயில் வந்தடைந்தது.

இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com