திருப்பத்தூர்
கின்னஸ் சாதனை: மாணவருக்கு ஆட்சியா் வாழ்த்து
ஆலங்காயம் அருகே கின்னஸ் சாதனை படைத்த மாணவா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லியிடம் வாழ்த்து பெற்றாா்.
ஆலங்காயம் அருகே கின்னஸ் சாதனை படைத்த மாணவா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லியிடம் வாழ்த்து பெற்றாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தை சோ்ந்த ஜீவானந்தம். இவா் சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி.(ஆப்டோமெட்ரி)3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்தநிலையில் ஜீவானந்தம் 12.1 கிராம் எடையில் சலவை இயந்திரம் தயாரித்து இயக்கி கின்னஸ் உலக சாதனை படைத்தாா்.
அதைத் தொடா்ந்து ஜீவானந்தம் கின்னஸ் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

