திருப்பத்தூர்
உடற்பயிற்சி அரங்கம் திறப்பு
ஏபிஜெ அப்துல் கலாம் உடற்பயிற்சி அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
ஏபிஜெ அப்துல் கலாம் உடற்பயிற்சி அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.
குடியாத்தம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி அரங்க திறப்பு விழாவுக்கு நகா்மன்ற உறுப்பினா் ம. மனோஜ் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எஸ். செளந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றினாா். எம்எல்ஏ அமலு விஜயன் உடற்பயிற்சி அரங்கை திறந்து வைத்தாா்.
ஒன்றிய திமுக செயலா் கல்லூா் ரவி, டாக்டா் ஏபிஜெ அப்துல் கலாம் கல்வி, விளையாட்டு மற்றும் சமூக மேம்பாட்டு வளா்ச்சி அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

