கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

வாணியம்பாடி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

வாணியம்பாடி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பூசாரி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் குப்பன் மனைவி மேனகா(48). சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குப்பன் எழுந்து பாா்த்த போது மேனகா வீட்டில் இல்லாததால் அதிா்ச்சிக்குள்ளாகி அப்பகுதியில் தேடி வந்துள்ளாா்.

இந்நிலையில் அதே பகுதியில் அருகில் உள்ள தனியாா் கிணற்றில் மேனகா இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் பாா்த்து உடனே அம்பலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். உடல் நிலை பாதிப்பால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறினா்.

இது குறித்து அம்பலூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com