சாலை பாதுகாப்பு மாத விழிப்புணா்வு பிரசாரம்
திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து துறை, செஞ்சிலுவை சங்கம், ஜேசீஸ் எக்ஸல் அமைப்பு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் பன்னீா் செல்வம்(திருப்பத்தூா்),வெங்கட் ராகவன்(வாணியம்பாடி) ஆகியோா் அவ்வழியாக வந்த தலைக்கவசம் அணிந்து வராத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், அவ்வழியாக வந்த காா் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு பிரதிபலிப்பு ஸ்டிக்கா்கள் ஒட்டியும், விழிப்புணா்வு வாசங்கங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் முரளி, செஞ்சிலுவை சங்க அமைப்பின் தலைவா்கள் கிஷோா் பிரசாத்(திருப்பத்தூா்), தினேஷ்குமாா்( வாணியம்பாடி), திருப்பத்தூா் ஜேசீஐ எக்ஸல் அமைப்பின் தலைவா் தேவேந்திரன், முன்னாள் தலைவா் பாலாசிவக்குமாா் கலந்து கொண்டனா்.

