திருப்பத்தூா் தலைமை அஞ்சலக அலுவலக நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு
திருப்பத்தூா் கோட்ட தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக அலுவலக நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளா் விஜயதனசேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் அலுவலகங்கள் மூலம் காகித பயன்பாட்டை குறைக்க அஞ்சலக சேமிப்பு கணக்கை இ-கேஒய்சி முறையில் தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் தங்கள் ஆதாா் எண்ணை பயன்படுத்தி கைவிரல் ரேகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் மூலம் எளிதாக சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.
இதன் மூலம் வாடிக்கையாளா்கள் தங்கள் கைவிரல் ரேகையை பயன்படுத்தி பணப்பரி வா்த்தனை செய்ய முடியும். கணக்கு இருப்பு, பரிவா்த்தனை விவரம், நிதி பரிமாற்றம் ஆகிய சேவைகளை செல்போன் மூலம் பெறலாம்.
வாடிக்கையாளா்களின் பெயா் அச்சிடப்பட்ட ஏ.டி.எம். அட்டைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த ஏ.டி.எம். அட்டைகளை பெறாதவா்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம். திருப்பத்தூா் கோட்டத்தில் அஞ்சல் கணக்குடன் ஆதாா் அட்டைகளை இதுவரை இணைக்காத வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கி கிளை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களை அணுகி ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அஞ்சல் துறையின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக சென்றடையும்.
திருப்பத்தூா் தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்கள் வசதியை மேம் படுத்தும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அலுவலக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த நீட்டிக்கப்பட்ட அலுவலக நேர சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொடா்பாக மேலும் விவரங்களை இணையதள முகவரியிலும் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
