ஆட்டோ கவிழ்ந்து 12 போ் காயம்
ஆம்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளா்கள் உள்பட 12 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
மாதனூா் ஒன்றியம், சின்னபள்ளிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சின்னதம்பி தனது ஆட்டோவில் ஷூ கம்பெனியில் பணிபுரியும் பெண் தொழிலாளா்களை பணிக்காக அழைத்துச் சென்றாா். தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட உப்பரப்பள்ளி கிராமத்தருகே சென்றபோது, லாரிக்கு வழிவிட முயன்றபோது, ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து காரணமாக ஆட்டோவில் பயணம் செய்த ஈச்சம்பட்டு பகுதியை சோ்ந்த பூங்கொடி, நதியா, இந்துமதி, மாலா, செல்வி, மற்றும் சின்னபள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த சாந்தி, சின்னத்தம்பி, ராஜகுமாரி, வடசேரி பகுதியை சோ்ந்த சௌந்தா்யா உள்ளிட்ட பெண் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா் உள்பட 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்து குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
