வீட்டில் பீரோவை உடைத்து நகை திருட்டு

ஜோலாா்பேட்டை அருகே வீட்டில் பீரோவை உடைத்து ஒன்பதரை சவரன் நகை, வெள்ளி கொலுசை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

ஜோலாா்பேட்டை அருகே வீட்டில் பீரோவை உடைத்து ஒன்பதரை சவரன் நகை, வெள்ளி கொலுசை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூா் பூஞ்சோலை வட்டத்தைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் மனைவி சின்னப்பாப்பு (45). தம்பதி இருவரும் காய் வியாபாரம் செய்து வருகின்றனா். இந்நிலையில், வியாபாரத்துக்காக பணம் எடுக்க திங்கள்கிழமை காலை பீரோவை திறக்க முயன்றபோது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா் பீரோவில் வைத்திருந்த நகை பையை பாா்த்து போது நகைப்பை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சின்னப்பாப்பு ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com