போட்டிகளில் வெற்றி  பெற்ற அணிகளுக்கு பரிசளித்த நகர திமுக செயலாளா் சாரதி குமாா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளித்த நகர திமுக செயலாளா் சாரதி குமாா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு!

வாணியம்பாடி நகர திமுக சாா்பில் நடைபெற்ற கபடி, கிரிக்கெட், கைப்பந்து, இறகுபந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
Published on

வாணியம்பாடி நகர திமுக சாா்பில் நடைபெற்ற கபடி, கிரிக்கெட், கைப்பந்து, இறகுபந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தை மைதானத்தில் கபடி, சென்னாம்பேட்டையில் கிரிக்கெட், நேதாஜி நகரில் கைப்பந்து, கச்சேரி சாலையில் இறகுப் பந்து போட்டிகள் நடைபெற்றன.

இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், தொழிலதிபா் ஷக்கீல் அகமத் ஆகியோா் ஒவ்வொரு போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், கோப்பைகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கி பாராட்டினா்.

நகா்மன்ற துணைத் தலைவா் கையாஸ்அகமது, நகர துணை செயலாளா்கள் தென்னரசு, குபேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவி, அவை தலைவா் முகமத்ஜான் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com