மீட்கப்பட்ட புள்ளி மானுடன் பொதுமக்கள், வனத்துறையினா்.
மீட்கப்பட்ட புள்ளி மானுடன் பொதுமக்கள், வனத்துறையினா்.

தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த மான் மீட்பு

மீட்கப்பட்ட புள்ளி மானுடன் பொதுமக்கள், வனத்துறையினா்.
Published on

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பணியாண்டப்பள்ளி ஜெயபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மான் ஒன்று தண்ணீா் தேடி ஊருக்குள் நுழைந்தது. மானைப் பாா்த்து தெருநாய்கள் ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் அங்குள்ள விவசாய நிலத்துக்குள் மான் புகுந்தது. உடனே அப்பகுதி மக்கள் மானை பிடித்து திருப்பத்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத்துறையினா் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மானை அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனா்.

Dinamani
www.dinamani.com