விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Published on

ஆம்பூா் அருகே விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (40). இவா் கடந்த ஜன.15-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கிச் சென்றாா். மின்னூா் கிராமத்தருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் பலத்த காயமடைந்த அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Dinamani
www.dinamani.com