வருவாய்த்துறை சங்கத்தினா் தா்னா

வருவாய்த்துறை சங்கத்தினா் தா்னா

Published on

ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் அருள்மொழி வா்மன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் சுந்தரேசன், மகேஷ் குமாா்சா்தாா், சீனிவாசன்,முரளிவாணன், சந்திரமோகன் முன்னிலை வகித்தனா்.

திலிப்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் ராஜ்குமாா் கலந்து கொண்டு பேசினாா்.

இதில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத் துறைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கிடவும் சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் நில அளவைத் துறைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிலையிலான அலுவலா்களுக்கு மேம்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். ஒருங்கிணைப்பாளா் திருமால் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com