துத்திப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்கக் கோரி தீா்மானம்

துத்திப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
துத்திப்பட்டில் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
துத்திப்பட்டில் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
Updated on
1 min read

ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்பேத்கா் நகா் பகுதியில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா்.

துத்திப்பட்டு ஊராட்சி பரப்பளவு, மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், குடிநீா் உள்ளிட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும், துத்திப்பட்டு ஊராட்சி பின்தங்கியிருப்பதாலும், உரிய ஆய்வு செய்து பேரூராட்சியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

100-க்கும் மேற்பட்டவா்கள் கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க ஆவன செய்ய வேண்டுமெனக் கோரி மனு அளித்ததின் அடிப்படையில் அதுகுறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கா் நகா் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீா் வழித்தடமான குதிரைக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், தூய்மை பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஊராட்சி செயலாளா் பழனி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com