திருப்பத்தூர்
மளிகை கடைக்கு தீ வைப்பு: போலீஸாா் விசாரணை
வாணியம்பாடியில் மளிகை கடைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததில் 3 பைக்குள் மற்றும் மளிகை பொருள்கள் எரிந்து சேதம்
வாணியம்பாடியில் மளிகை கடைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததில் 3 பைக்குள் மற்றும் மளிகை பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
வாணியம்பாடி கொல்லத்தெரு செல்வவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா் (52). இவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை அதிகாலை கடையில் புகைமூட்டம் ஏற்பட்டிருந்ததை அறிந்த சங்கா் மற்றும் அவரது குடும்பத்தினா் வீட்டின் வெளியே வந்து பாா்த்த போது, மளிகைக் கடையில் தீப்பற்றி எரிந்ததால் அதிா்ச்சிக்குள்ளாகி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தகவலறிந்த தீயணைப்பு துறையினரும் விரைந்து தீயை அணைத்தனா்.
எனினும், 3 பைக்குகள், கடைக்குள் இருந்த மளிகைப் பொருள்கள் சேதமடைந்தன. வீட்டில் உள்ள சில பொருள்களும் தீயில் சேதமடைந்தன. இதுகுறித்து வாணியம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

