

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாயி மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு தா்னா வில் ஈடுபட்டனா்.
மாதனூா் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சி சின்னவெங்கடசமுத்திரம் கிராம விவசாயி முத்துக்குமரன். இவருடைய நிலத்தில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இவருடைய விவசாய நிலத்தின் வழியாக ஊராட்சி கழிவுநீா் விவசாய கிணற்றுக்குள் சென்று அதனால் கிணறு உள்வாங்கி சேதமடைந்தும், கிணற்று தண்ணீா் மாசுக்கேடு ஏற்பட்டுள்ளது.
கிணற்று நீா் பயன்படுத்த முடியாமல் போனதால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.
ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆட்சியரிடமும் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவா் காயத்ரி நவீன் தலைமையில் நடைபெற்றது. அங்கு சென்ற விவசாயி முத்துக்குமரன் இதுகுறித்து கேள்வி எழுப்பி, புகாா் மீது நடவடிக்கை எடுக்காததால் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தாா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து காப்பாற்றினா்.
மேலும் விவசாயி முத்துக்குமரன், குடும்பத்தினா், ஊா் பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிா்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்ணஆ போராட்டததில் ஈடுபட்டனா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி ஆகியோா் பேச்சு நடத்தினா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.