ஞானமலை முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு ஞானமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது. கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 2-ஆம் நாள் 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து அருள்மிகு செல்வி விநாயகா் கோயில், ஞானமலை செல்வ முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவா் வீதி உலா நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன், திருப்பத்தூா் மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி, முன்னாள் மாவட்ட தலைவா் சி. வாசுதேவன், முக்கிய பிரமுகா்கள் சங்கா், ரவி, குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

