திருப்பத்தூர்
மரம் வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்
திருப்பத்தூா் அருகே மரம் வெட்டியதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அருகே மரம் வெட்டியதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விஷமங்கலம் கோடியூரில் 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தீக்குச்சி மரம் இருந்தது. அந்த மரத்தை அடையாளம் தெரியாத சிலா் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஊா் மக்கள் மரம் வெட்டியதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பத்தூா் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மேலும் அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்தனா். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சதானந்தன், பாலமுருகன் மற்றும் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

